கேரள அரசியலும் தமிழர்களும்.[ஆய்வுக்கட்டுரை] அசுஆ சுந்தர்-THE NADAR GENERATION




கேரள அரசியலும் தமிழர்களும்.[ஆய்வுக்கட்டுரை]
அசுஆ சுந்தர்-THE NADAR GENERATION

கேரள மாநிலத்தில் தமிழை மட்டுமே தாய் மொழியாக கொண்டோர் சுமார் 3 % உள்ளனர். அதாவது மாநிலத்தின் மொத்த மக்கட்தொகையில் சுமார் இருபது இலட்சம் பேர் ஆவர். மலையாளமும் தமிழும் தெரிந்த தமிழர் சுமார் பன்னிரண்டு விழுக்காடு (12%) ஆவர். இவர்களை கேரள அரசு, மொழிக் கொள்கைக்காக மலையாளிகளாக வரையறுத்து வைத்துள்ளது. தமிழை மட்டுமே தாய் மொழியாக கொண்டோர் பாலக்காடு பார்ப்பனர், கொங்கு வெள்ளாளர், பள்ளர், மறவர் மற்றும் தமிழ் முசுலிம் ஆவர். தமிழ் மற்றும் மலையாளம் இரண்டையும் அறிந்த தமிழர் சமூகத்தினர் , நாடார், தமிழ் மீனவர், நாஞ்சில் வெள்ளாளர், எட்டு வீட்டில் பிள்ளைமார், கோட்டயம் கிறித்தவர் ஆகியோர் ஆவர்.

கேரள மக்கட்தொகையில் சுமார் 7% உள்ள நாடார்களே மிகப்பெரும் தமிழ் சமூகத்தினர் ஆவர். இவர்கள் பெருமளவில் திருவனந்தபுரம் மாவட்டத்திலும் கணிசமான எண்ணிக்கையில் கோட்டயம், இடுக்கி மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டத்தில் உள்ளனர். தமிழர்களான நாடார்களை வைத்து அங்கு பெரும் அரசியல் சதுரங்கம் நடந்து வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் நாடார்கள் சுமார் 50% பேரும் , கொல்லம் மாவட்டம் (21%), கோட்டயம் (23%) மற்றும் இடுக்கி மாவட்டத்தில் 20% பேரும் நாடார்கள் ஆவர். கோட்டயம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் நாடார்கள் பரவலாக எஸ்.ஐ.யூ.சி மற்றும் சிரியன் கத்தோலிக் ஆகிய கிறித்தவர்களாகவும், திருவனந்தபுரம் மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் வழி இந்துக்கள், இலத்தீன் கத்தோலிக் மற்றும் எஸ்.ஐ.யூ.சி பிரிவினர்களாகவும் உள்ளனர்.
திருவனந்தபுரம் மாவட்டம், சிறையின்கீழ், திருவனந்தபுரம், நெடுமங்காடு மற்றும் நெய்யாற்றின்கரை ஆகிய நான்கு வட்டங்களை கொண்டது. மேலும், பாறசாலை, அதியனூர், பெரும்கடவிளை , நேமம், திருவனந்தபுரம் ஊரகம், கழக்கூட்டம், நெடுமங்காடு, வெள்ளநாடு, வாமனபுரம், சிறையின்கீழ், கிளிமானூர் மற்றும் வர்க்கலை ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கியது. இதில் சிறையின்கீழ், கிளிமானூர் மற்றும் வர்க்கலை ஆகிய வட்டாரங்களில் தமிழர்களை விட மலையாளிகள் அதிகமாக வாழ்கின்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டம் அரசியல் வகையில் 14 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. அவை 1) திருவனந்தபுரம் 2) கழக்கூட்டம் 3) வட்டியூர்க்காவு 4) நேமம் 5) கோவளம் 6) நெய்யாற்றின்கரை 7) பாறசாலை 8) காட்டாக்கடை 9) அருவிக்கரை 10) வாமனபுரம் 11) நெடுமங்காடு 12) சிறையின்கீழ் 13) ஆற்றின்கல் மற்றும் 14) வர்க்கலை ஆகும். இவற்றில் சிறையின்கீழ், ஆற்றின்கல் மற்றும் வர்க்கலை ஆகிய தொகுதிகளில் மட்டுமே நாடார்களை விட நாயர்கள் கூடுதலாக உள்ளனர். இனி தொகுதி வாரியாக ஆராய்வோம்.
தமிழ் நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தும் நாயர், பிள்ளைமார் போன்றோர் பல தொகுதிகளில் வென்றனர். இதற்கு காரணம் நாடார்கள் இனம்/மொழி வாரியாக அரசியல் செய்யாமல் மத அரசியல் செய்வதால் தோல்வியே மிஞ்சுகிறது. ஜே.சி.டேனியல், நடிகர் சத்யன், குஞ்சு கிருஷ்ணன் நாடார், உன்னி கிருஷ்ணன் நாடார், சுந்தரம் நாடார், நீல லோகிதாசன் நாடார், ரகு சந்திரபால், சார்லஸ் போன்றோர் சிறப்பாக பணியாற்றியும் தற்போது சாக்தன் நாடார், ஜமீலா பிரகாசம், செல்வராஜ் நாடார், ஏ.டி. ஜார்ஜ், விஷ்ணுபுரம் சந்திரசேகரன், வி.ஜே.தங்கப்பன், ஐ.ஜான், கங்காதர நாடார், என்.ஆர்.தங்கராஜ், கத்திபாறை சுந்தரராஜ், போன்றோர் சிறப்பாக பணியாற்றியும் வருகின்றனர். திருவனந்தபுரம் மாவட்டத்தில் 10 தொகுதிகளில் நாடார்கள் பெரும்பான்மையாக இருந்தும் 4 தொகுதிகளில் மட்டுமே வென்றனர். இதற்கு நாயர்/ பிள்ளைமார் கூட்டுச்சதி என்று புலம்புகின்றனர்.

பிள்ளைமார்/நாயர் கூட்டுச்சதியும் நாடார்களின் இளித்தவாய்த்தனமும்:-
திருவனந்தபுரம் மாவட்டத்தில் நாயர்கள் சுமார் 18% பேரும் , பிள்ளைமார் 3% பேரும் உள்ளனர். நாடார்களோ 50% க்கும் சற்று கூடுதலாக உள்ளனர். இவ்வளவு வலிமையாக இருந்தும் வெறும் 3% மட்டுமே இருக்கும் பிள்ளைமார்களிடம் ஏமாந்து விடுகின்றனர். சூது, வஞ்சகம், பழிவாங்கும் எண்ணம், பெண்களை கவர்தல் போன்ற எண்ணம் படைத்த இப்பிள்ளைமார்கள் நாடார்கள் அதிகமாக வசிக்கும் நெடுமங்காடு, அருவிக்கரை மற்றும் நேமம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறுகின்றனர். இதற்கு இவர்கள் கூறும் காரணம் நாடார்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள குமரி மாவட்டத்தில் வாய்ப்புகள் உள்ளனவாம் ஆனால் இவர்களுக்கோ கேரளத்தில் ஒரு சில இடங்களில் தான் வலிமை இருக்கின்றதாம் எனவே நாடார்கள் விட்டுக்கொடுக்க வேண்டுமாம். இப்படி தந்திரமாக பேசி பிள்ளைமார்கள் காரியம் சாதிக்கின்றனர், நாடார்களோ வீண் ஜம்பம் பேசி ஏமாறுகின்றனர்.

பாருங்கள் இந்த அவலத்தை. நெடுமங்காடு தொகுதியில் மொத்த வாக்குகள் 1,74,889 ஆகும். இங்கு வி.எஸ்.டி.பி என்ற நாடார் அமைப்பை ஏமாற்றி பாலோடு ரவி என்னும் பிள்ளைமார் சமூக வேட்பாளர் தொகுதியில் உள்ள நாடார் வாக்குகளில் (89,661- நாடார்கள் 52% ஆவர்) பெரும்பகுதியை பெற்று வெல்கிறார். இங்கு இவரது பிள்ளைமார் வாக்குகள் வெறும் 11,017 மட்டுமே ஆகும். அதாவது சதவிகிதத்தில் 6% மட்டுமே ஆகும். இங்கு குஞ்சு கிருஷ்ணன் நாடாருக்கு பின்பு எவருமே போட்டியிடவில்லை. இதுவே பிள்ளைமார்கள் இந்த தொகுதியை நாடார்களிடம் இருந்து ஏமாற்றி பெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.

மேலும் " நேமம் " என்ற தொகுதி பிரமிக்கத்தக்க அளவில் நாடார் வாக்காளர்களைக் கொண்டுள்ளது. நேமம் தொகுதியின் மொத்த வாக்காளர்களான 1,71,841 எண்ணிக்கையில், சுமார் 90,726 வாக்காளர் (அதாவது 53%) நாடார் இனத்தினர் ஆவர். இங்கு 29,778 ஈழவரும், 24,616 முக்குவரும், 17, 890 நாயரும், ஐயாயிரத்துக்கு குறைவான பிள்ளைமாருமே உள்ளனர். இங்கும் வி.எஸ்.டி.பி என்ற நாடார் அமைப்பினை ஏமாற்றி நாடார்களின் செல்லப்பிள்ளை என்று கூறிக்கொண்டு வி.சிவன்குட்டி என்ற பிள்ளைமார் வெற்றி பெறுகிறார். பல ஆண்டுகளாக நாடார்களின் கோட்டையாக இருந்த தொகுதியில் நாடார் போட்டியிடாமல் "விட்டுக்கொடுத்ததே" ஆகும். சிவன்குட்டியும் வி.எஸ்.டி.பி தலைவர் வி.சந்திரசேகரன் நாடாரும் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டிக்கொண்டு (நட்புக்காக பட கதை போலும்) இருந்ததால் வேறு நாடார்களை போட்டியிடாவண்ணம் நட்புக்காக காவு வாங்கிய தொகுதி தான் "நேமம்" ஆகும். இப்படி செய்து கொண்டு "ஐயகோ நாடார் இனம் ஏமாறுகின்றதே" என்று புலம்பினால் நியாயம் ஆகுமா?

அடுத்து அருவிக்கரை தொகுதிக்கு வருவோம். இத்தொகுதி 1,64,690 வாக்களர்களை கொண்டது. மொத்த வாக்காளர்களில் நாடார்கள்( 55,776), நாயர்கள் (34,664), புலையர் (23,915) தச்சர்கள் (16,754), பிள்ளைமார்கள் (15,198), ஈழவர் (12,301) மற்றும் பிறர் (6,082). இங்கும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் பிள்ளைமார்கள் மாமன் மச்சான் என்று கூறிக்கொண்டு நாடார்களின் கோட்டையில் ஓட்டையிட்டு விட்டனர். ஆம், வெற்றி பெற்றவர் கார்த்திகேயன் என்ற பிள்ளைமார் ஆவார். நாடார்கள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் தொடர்ந்து ஏமாற்று வித்தையை நாடார்களிடம் காட்டி வருகின்றனர். நாடார்களும் அவலை நினைத்து உமியை இடித்தாள் கதையாக பிள்ளைமார்களிடம் பல விதத்திலும் ஏமாந்து வருகின்றனர்.

வட்டியூர்க்காவு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் நாடார்கள் அதிகமாக வாழும் மற்றொரு தொகுதியாகும். இங்கு மொத்த வாக்காளர்கள் 1,74,721 ஆவர். இதில் நாடார் (54,434), நாயர் (42,883), முக்குவர் (32,908), ஈழவர் (24,855) மற்றும் பிற சமூதாயத்தினர் (19,000) ஆவர். நாடார்களில் பெரும்பான்மையோர் எஸ்.ஐ.யூ.சி கிறித்தவர் ஆவர். குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் இந்து நாடார்கள் (ஐயா வைகுண்டர் வழி) இந்துக்களான நாயர்களுக்கே வாக்களிக்கின்றனர். இங்கு நாயர்களின் சதிராட்டம் வெற்றி பெறுகிறது. மத அரசியலில் தமிழ் நாடார்கள் இங்கு ஒரு வாய்ப்பை இழக்கின்றனர். இங்கு முன்னாள் முதலைமைச்சர் கருணாகரனின் மகன் கே. முரளீதரன் (நாயர்) வெற்றி பெற்றார். நாடார் வேட்பாளர் (செறியான் பிலிப்) தோல்வியுற்றார்.

எதிரிகளின் தந்திரத்தை விஞ்சிய நாடார்களின் வெற்றி:
எதிரிகளின் பசப்பு வார்த்தைகளும் சாக்தன் நாடாரின் காட்டாக்கடை வெற்றியும்:
காட்டாக்கடை என்பது திருவனந்தபுரத்தின் நகர்ப்புற தொகுதியாகும். இத்தொகுதி 1,65,300 வாக்காளர்களைக் கொண்டது. இதில் நாடார் (84,746), நாயர் (55,161), பிள்ளைமார் (8,348) மற்றும் இதரவர் (சுமார் 15,000) ஆவர். எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு நாயர் ஆதிக்கம் அதிகம் ஆகும். நாடார்களில் அய்யா வழி மற்றும் எஸ்.ஐ.யூ.சி பிரிவினர் இங்கு பெருமளவில் உள்ளனர். அய்யாவழி (45,000), எஸ்.ஐ.யூ.சி (30,000) மற்றும் பிற நாடார்கள் (இலத்தீன் கத்தோலிக் மற்றும் மலங்கரை) (9,000) ஆவர். இங்கு பிள்ளைமார் சமூகத்தின் நாயர் சமூக வேட்பாளாரான ஜெயா தளி , சாக்தன் நாடாருக்கு எதிராக (Non Nadar Consolidation ) அதவாது நாடாருக்கு எதிரான வாக்குகளின் அணிவகுப்பினை உருவாக்கினார். இங்கு எஸ்.ஐ.யூ.சி மற்றும் அய்யாவழி நாடார்கள் ஒற்றுமையாக இருந்து நாயர்களின் ஆதிக்கத்தை முறியடித்தனர். நாடார்களுக்கு எதிரான நாயர்/பிள்ளைமார்களின் மத அரசியல் இங்கு எடுபடவில்லை.ஜெயா தளியை சாக்தன் நாடார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காட்டக்கடை நாடார்களின் கோட்டை என நிரூபிக்கப்பட்டது.

கோவளம் தொகுதியும் நாயர் வால்பிடிக்கும் முக்குவரும்:
கோவளம் தொகுதி ஒரு கடலோரத் தொகுதியாகும். திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான இத்தொகுதி 1,83,116 வாக்களர்களைக் கொண்டது. இதில் நாடார் (1,18,905), முக்குவர் (24,675), நாயர் (23,901) மற்றும் பலர் உள்ளனர். இங்கு நாடார்களில் பெரும்பான்மையோர் எஸ்.ஐ.யூ.சி கிறித்தவர் ஆவர். சுமார் 1,18,000 நாடார் வாக்குகளில் சுமார் 70,000 கிறித்தவரும் 48,000 இந்துக்களும் உள்ளனர். கிறித்தவ நாடார் வாக்குகளை கணக்கிற் கொண்டு ஜார்ஜ் மெர்சியர் எனும் கிறித்தவ முக்குவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. முன்னாள் அமைச்சரான டாக்டர். நீல லோகிதாசன் நாடார் தனது மனைவியான ஜமீலாவை வேட்பாளராக நிறுத்தினார். நீல லோகிதாசன் நாடாருக்கு எதிராக பல்முனை பரப்புரைகள் செய்யப்பட்டன. நளினி நெட்டோ என்னும் முன்னாள் ஐ.ஏ .எஸ் அதிகாரியின் பாலியல் வழக்கினை கையில் எடுத்து அசிங்க அரசியல் செய்தார் நாயர் ஆதரவு பெற்ற ஜார்ஜ் மெர்சியர். ஆனாலும் ஜமீலாவை நாடார்கள் கரை சேர்த்தனர்.எவ்வளவோ முயன்றும் இங்கு நாடார்களின் வெற்றியை நாடாருக்கு எதிரான அரசியல் சக்திகள் தடுக்க முடியவில்லை.

நெய்யாற்றின்கரை அரசியலும் நாயர்களின் நில அபகரிப்பு மனப்பான்மையும்:
தமிழர் எவரின் நிலங்களையும் கைப்பற்றிக்கொண்டதில்லை. ஆனால் மாற்று சமூகத்தினர் தாம் தமிழரின் பாரிய பரப்புகளை திருடி வைத்துள்ளனர். அவற்றுள் தலையாய ஒன்று நெய்யாற்றின்கரை ஆகும். அப்பட்டமான தமிழ் பகுதியான இத்தொகுதி தமிழர்களான நாடார்கள் பெருமளவில் வசிக்கும் தொகுதியாகும். இத்தொகுதி நெய்யாற்றின்கரை நகரம், காரோடு, அதியனூர், திருபுரம், குளத்தூர் ( குளத்தூர் நாடார்கள் சிலர் நாயர்/பிள்ளைமார் ஆகியோரின் கொடூரத்துக்கு அஞ்சி இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடிக்கு அருகே குளத்தூர் என்னும் ஊரினை அமைத்து குடியேறினர்), மற்றும் செங்கல் ஆகிய சிற்றூர்களைக்கொண்டது .இதில் அனைத்து ஊர்களிலுமே நாடார்களே பெரும்பான்மையாக உள்ளனர். இத்தொகுதி 1,57,004 வாக்காளர்களைக் கொண்டிருந்தது. இதில் நாடார் (1,02,413), நாயர் (35,148), ஈழவர் மற்றும் பிறர் சுமார் 20,000 ஆவர். நாடார்களில் (1,02,000) சுமார் (70,000) பேர் இலத்தீன் கத்தோலிக் ஆவர், (32,000) பேர் அய்யாவழி நாடார் ஆவர். இங்கும் ஆதிக்க வெறி பிடித்த நாயர்கள் தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஓ.ராஜகோபால் என்பவரை தீவிரமாக ஆதரித்ததோடு அய்யாவழி நாடார்களை ஏமாற்ற முனைந்தனர். இங்கு காங்கிரஸ் சார்பில் வலிமையான வேட்பாளரான செல்வராஜ், மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் சார்பில் லாரன்ஸ் என்பவரும் போட்டியிட்டனர். செல்வராஜ் மற்றும் லாரன்ஸ் ஆகியோர் நாடார்கள் ஆவர். போட்டி கடுமையாக இருப்பாதாக ஊடகங்கள் கணித்தன. நாடார்களின் அசைக்க முடியாத கோட்டையான நெய்யாற்றிங்கரையை அசைத்தே தீருவது என்று (என்.எஸ்.எஸ்.) எனப்படும் நாயர் சர்வீஸ் சொசைட்டி களமிறங்கியது. நாடார்கள் கவனமாக வாக்களித்து நாயர் முகத்தில் கரி பூசினர். ஆம், மக்களின் வேட்பாளர் செல்வராஜ் (இங்கு கட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை) வெற்றி பெற்றார். பாரதீய ஜனதா வேட்பாளர், ஓ.ராஜகோபால் ஓட ஓட விரட்டப்பட்டார்.

பாறசாலை தந்த படிப்பினை:
நாடார்களுக்கு அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்திய தொகுதி கேரளத்தின் கடைக்கோடி தொகுதியான பாறசாலை ஆகும். கள்ளிக்காடு, அம்பூரி, ஒட்டசேகரமங்கலம், அரியன்கோடு, பெரும்கடவிளை, குன்னத்துக்கல், கொல்லையில், வெள்ளராடம் மற்றும் பாறசாலை ஆகிய ஊர்களைக்கொண்டது. 1,87,565 வாக்காளர்களைக் கொண்ட பாறசாலை தொகுதியில் நாடார் ( 1,32,077), நாயர் (28,184), பிள்ளைமார் (13,109) மற்றும் பிறர் (15,000) ஆவர். நாடார் சமூகத்தின் இரும்புக்கோட்டையான இத்தொகுதியில் ஏ.தங்கப்பன் நாடாரின் மகன் திரு.ஏ.டி .ஜார்ஜ் என்பவர் களமிறங்கினார். நாயர்களுக்கு இங்கேயும் ஆசை போலும்!!! அனவூர் நாகப்பன் என்பவர் நாயர் சார்பில் கொம்யூனிஸ்ட் வேட்பாளராக வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டார். இதற்கு நாயர் ஆதிக்கமுள்ள மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்டின் தவறான முடிவே ஆகும். இதனால் தான் நெய்யாற்றின்கரை செல்வராஜ் மார்க்சிஸ்ட் அமைப்பிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு நாடார்களிடம் நாயர்களின் பருப்பு வேகவில்லை. அனவூர் நாகப்பன் படுதோல்வி அடைந்தார். நாடார்கள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதை காட்டாக்கடை மற்றும் பாறசாலை வெற்றிகள் உணர்த்தின.
தற்போது வி.எஸ்.டி.பி (வைகுண்டர் சமூக தர்ம பரிபாலன சபை), என்.ஐ.வி (நாடார் ஐக்கிய வேதி), என்.எம்.எஸ் (நாடார் மகாஜன சங்கம்), இந்து நாடார் சமாஜம், நாடார் குடும்பக்ஷேம சமிதி ஆகிய அமைப்புகள் நாடார்களின் வலிமையை உணர்ந்து தற்போது கேரள அரசியலில் கவனத்துடன் அடியெடுத்து வைத்துள்ளனர். தற்போது அய்யா வைகுண்டரின் பிரசாரங்களை திருவனந்தபுரத்தின் மையப்பகுதியில் வைப்பதற்கு போராட்டங்கள் நடத்தி சாதித்துள்ளனர். இதற்கு நாடார்களின் அரசியல் அரசியல் விழிப்புணர்வு பெற்றமையே ஆகும்.

இப்பதிவு நாடார் சமூகத்தினர் எவ்வாறு தங்களது எண்ணிக்கைக்கு இணையான ஆளும் உரிமையை இழந்திருந்தனர் எனவும் அதனை மீட்கும் பொருட்டு தற்போது என்னென்ன முயற்சிகள் எடுக்கவேண்டும் என்பதை உணர்த்தும். நாயர்/பிள்ளைமார் ஆகிய சமூகங்களின் ஆதிக்க வெறி தற்போது திருவனந்தபுரம் மாவட்டத்தில் நொறுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் தமிழ் நாடார்கள் கேரள அரசியலில் தங்கள் முத்திரையை பதிப்பர்.
நன்றி-அசுஆ சுந்தர் அவர்களின் THE NADAR GENERATION –இல் பதிவு செய்யப்பட்ட கட்டுரை


5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Saffron forces already divided Nadar community in the name of religion. Now they (brahmins, half-brahmins and stooges) divide and rule happily.

    ReplyDelete
  4. Saffron forces already divided Nadar community in the name of religion. Now they (brahmins, half-brahmins and stooges) divide and rule happily.

    ReplyDelete
  5. Saffron forces already divided Nadar community in the name of religion. Now they (brahmins, half-brahmins and stooges) divide and rule happily.

    ReplyDelete

எழுநூற்றுவ கொங்கவாளர்கள் (thanks Shera Nadan)

எழுநூற்றுவ கொங்கவாளர்கள்☀🌙 ▪️பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முக்கியமான சான்றோர் அமைப்புகள் அரசாங்கத்தை அமைத்தன. எழுநூற்றுவர் அதே ப...