வணிகத்தின் அடைப்படையாக அன்று இன்றும் விளங்குவது நாணயம் ஆகும்.சோழர் காலத்தில் காசுகள் புழக்கத்த்திலிருந்த காசுகளில் ''மாடை'' என்பது ஒன்று.''இராசராசன் மாடை'',''மதுராந்தகன் மாடை'' என வழங்கியதாக ஆய்வர் சுட்டுவர். ''நாட்டார் மாடை'' எனப்பட்டதுமுண்டு. சில வெளிநாட்டு நாணயவியலாளர்கள்தங்கத்திலிருந்து செய்யப்பட நாணயங்கள் குறித்து விவரித்துள்ளனர் .(நாணயவியலார்-தினமலர் கிருஷ்ணமூர்த்தி ).
நாடார்களின் வரலாற்றைப்பேசும் பெரும்பாலான நூல்கள் ''மாடை'' எனும் காசு குறித்து பேசுகின்றன. ''மாடைக்காசு'' வழக்கம் செய்தோராக அவர்களை குறிப்பிடுகின்றன.வலங்கை மாலை,வெங்கலராஜன் கதை, வலங்கை வாழ்த்து,ஆதி பூர்வ மண்டங்குடி மன்னன் வரலாறு என பலவும் இதை பதிவு செய்துள்ளன.
தொல்லியலாளர் நெல்லை நெடுமாறன் '' இக்காசு சாணார் காசு என்றும் அழைக்கப்பெறும்.விளக்கு மாட த்தில் இட்டு வைத்திருப்பதால் 'மாடக்காசு' எனப்பெயர் பெற்றது என்று தெரிவிக்கிறார்.( சான்றோர் காசு)
//தென்னவா சோழர்குல வேந்தே கேட்டருள்வாய்
மன்னவா பொன்னாலே மாடைக்காசு உண்டாக்கி//
// தென் புவியை யாளுகின்ற சேரகுல மன்னாகேள்
அம்புவியில் சான்றோர்கள் ஆன மாடை // (வலங்கை மாலை, வரி:2916-1923) என விளக்குகிறது.
வெங்கலராஜன் கதையில்
// தங்கப் பொன்னானதிலே தங்கள் காசி தானடித்து
''ஒரு புறத்தி லுனது அச்சும் ஒரு புறத்தில் வெந்து அச்சும்//
தருவாய் உலகமெலாம் சாணான் காசு எனவே'' என குறிக்கிறது. (வெங்கலராஜன் கதை பக்.32)
கருமாபுரம் செப்பேடு...
. '' கோரக்கருளால் ரஸா வாதமுங்
கற்றுப் பிசகாதனாட்டுகள் மாடக்காசு
வழக்கங் செய்த பெரியோரான ...// என நீள்கிறது.
சித்தூர் (ஆந்திரா ) திருமலைக்கோவில் கல்வெட்டு
''நாட்டார் மாடை'' இடம்பெற்றுள்ளது.
//நாட்டார் மாடையில் வகுத்த காணிக்கை// என குறிக்கப்படுகிறது.
பாலையானந்த சித்தரின் 'ஞானக்கும்மி' ரசவாதத்தை ''சாணார் வாதம்'' எனல் காணலாம்.
அகத்தியர் அகத்திய காவியமும் இரசவாதத்தை சாணார் வாதம் என்றே கூறுவதை நோக்கலாம்.
No comments:
Post a Comment