சேர்வைக்காரன் என்னும் பட்டம் கொண்ட நாடார்கள்
கி.பி 1700 முதல் 1735 வரை,திருநெல்வேலி சீமையில் தளகர்த்தாவாக இருந்த குமாரசாமி முதலியாரின் மருமகனான ஆறை அழகப்ப முதலியார் தம்மிடத்தில் கணக்கு கொடுக்க வரும் பாளையக்காரர்களை மித மிஞ்சின மரியாதைகள் செய்யும்படி கட்டளைகள் செய்ததால்,
சில பாளையக்காரர்கள் அவருக்கு சதி செய்ய நினைத்து சிவகிரி பாளையக்காரரான தென்மலை வன்னிய மறவர் தூண்டி விட்டு தூங்குக் சமயத்தில் சிரைச்சேதம் செய்து விட்டார்கள்.
அச்சமயத்தில் குமாரசாமி முதலியார் நாடார்களின் உதவியை நாடினார். மேல் திருநெல்வேலி நாட்டில் நாடார் குலத்தவராக பரம்பரை யுத்த வீரர்களாக "சேர்வைக்காரன்"(படைத்தலைவன்) என்னும் பட்டம் இருந்தது.
பேயம நாடன்
மாடக்கண்ணு நாடன்
புறங்காட்டாப்புலி நாடன்
சூட்சமுடையான் நாடன்
என்னும் நான்கு தளகர்த்தகளுடன் இணைந்து சேனைகளை கூட்டி போய் சிவகிரியில் வன்னிய மறவர்களுடன் யுத்தம் செய்து அவரை கொன்று, அவருடைய சேனையையும், கோட்டையையும் நாசம் செய்து விட்டார்கள்.
மேற்கண்ட வீரச்செய்கையின் நிமித்தம் முதலியாரின் குடும்பத்தினர் தங்களுடைய தாலிக்கு பாதுகாப்பு அளித்ததால்,
பேயம நாடன் சேர்வைக்காரர் என்னும் சேனாபதிக்கு "தாலிக்கு வேலி"என்னும் பட்டமளித்து புகழ்ந்தனர்
இந்நிகழ்வை பரம்பரையாக பாடிவரும் பாட்டின் மூலம் அறியலாம்
"நிலை கொண்ட கீர்த்தி அழகப்பராயன் தன் நித்திரையில்
கொலைகொண்ட பாதகன் தென்மலை வன்னியன் கோட்டை தன்னில்
அலைவந்து மோதியே ராவணன் கோட்டைய ழிந்தது போல்
தலைகொண்டு வந்த என் 'தாலிக்கு வேலி' தளசிங்கமே".
No comments:
Post a Comment