ஈரோடு "நாடார் மேடு"


இன்றைய ஈரோடு "நாடார் மேடு" என்று பெயர் ஒருகாலத்தில் "பெருமாள் நாடார் மெத்தை" என்றே வழக்கத்தில் இருந்தது.

தகப்பனார் தம்பனநாடார், தாயார் கருப்பாயி அம்மாள் அவர்களின் தவப்புதல்வர் பெருமாள் நாடார். பெருமாள் நாடார் அவர்களுக்கு வாரிசுகள் ஏழு ( 6ஆண், 1பெண்) உள்ளனர்.

பெருமாள் நாடார் அவர்கள் சுதந்திர போராட்ட வீரர். அவர் நாடார் மேடு பகுதியில் கிட்டத்தட்ட 15 ஏக்கர்க்கு மேல் நிலம் வைத்திருந்த பெரும் செல்வந்தர்.

இவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் சுதந்திர போராட்டத்திற்காகவும் ஏழைகளுக்காவும் விற்று செலவு செய்தவர்.

தியாகி எனக்கூறி அரசு சலுகைகள் பெறக்கூடாது என சத்தியம் செய்துகொண்டவர்.

இவர் நத்தக்காடையூர் கொக்குமடை பகுதியிலுள்ள வெடிக்காரன் கூட்டத்தைச் சார்ந்த மூடுபாறை கருப்பண்ணசாமியை குலதெய்வமாக கொண்டவர்.

பெருமாள் நாடார் சிறந்த ஆன்மீகவாதி. இவர் 1974 ஜீவசமாதி ஆனார். இவருடைய ஜீவசமாதி புதுக்கோட்டைக்கு அருகே மெய்வழிச்சாலையில் உள்ளது தைப்பூச நன்னாளில் ஜீவசாமாதி ஆனார்.

No comments:

Post a Comment

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி:- இவ் வேந்தன் கடைச் சங்க நாளில் விளங்கிய பாண்டியர்களுள் ஒருவனாவன் இளம் பருவத்திலேயே பேரறிவினனாக இ...