சான்றோர்குல நாடார்களின் பண்டிகை ஓணம்
கேரளத்தின் அறுவடை திருநாள் (ஓணம்) ஆகும் , மலையாளம் என்ற மொழி தோன்றுவதற்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பே சேர நாட்டு தமிழர்களால் கொண்டாபட்டது ஓணம், முதல் நாள் அஸ்தம் துவங்கி இறுதி நாள் திருவோணம் வரை 10 நாட்கள் நடைபெறும்
கொல்லவருஷம் என்று கேளத்தில் பின்பற்றபடும் ஆண்டு வருவதற்கு முன்னரே ஓணம் கொண்டாட பட்டது , நாடார்குல அரசர் 3ஆம் சேரமான் பெருமாள் கிபி் 825 ல் கொல்லம் துவங்கினார் அதே வருடம் சான்றார் (சாணார்) காசும் வெளியிட்டார் , இந்த ஆண்டின் துவக்கம் ஆவணி மாதம், இந்நேரம் தென்மேற்கு பருவ மழை பெய்து நாட்டில் எங்கும் பச்சை செழிமையும் , ஈரபதமும் நிறைந்திருக்கும் , பூக்கள் பூத்து குலுங்கும்
இன்றளவும் குமரியில் நாடார்களுக்கு ஆவணி ஓர் விசேஷ மாதம் , குடும்பத்தில் சுபநிகழ்சிகள் , கோயில் திருவிழாக்கள் நிறைந்திருக்கும் எங்கும் பூ மணம் கமழ்ந்திருக்கும்...ஓணம் ஊச்சல் , அத்தபூ கோலம் இடுதல் , பல்சுவை உணவு சமைத்தல் போன்ற மரபுகளை #சேர #நாடாண்ட குமரி #நாடார்கள் இன்றளவும் பின்பற்றுகிறார்கள்
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில், பாண்டிய நாடான் அரச குடும்பத்தார் திருவோணத்தை பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.
"பொலம்தார் மாயோன் மேய ஓண_நன்_நாள் கோணம்
திருமால் பிறந்த நட்சத்திரமாக பத்தாம் நாள் திருவோணம் கருதபடுகிறது , திருமால் அவதாரங்கள் அனைத்தும் சூரிய குலத்தில் நடந்தேறியுள்ளது , சேர மன்னர்களும் இதே சூரிய குலத்தாரே.....சேர வழி வந்த சூரிய குல, சேரர் நாடன்கள் , மார்தாண்டன்கள் இன்றளவும் குமரியில் வசிக்கின்றனர்
No comments:
Post a Comment