பாண்டியர் -களப்பிரர்-பரதவர்(நன்றி -ராசின் ராசின்)


களப்பிரர்களை வென்று மீண்டும் அதிகாரத்தை எய்துகிறார்கள்  பாண்டியர். ஆனால் களப்பிரர்களை வீழ்த்தியதோடு சும்மா இருந்து விடவில்லை பாண்டியர்கள். தென் பரதவர்கள் என்று அழைக்கப்பட்ட  பரதவர்களையும் சேர்த்தே வீழ்த்துகின்றனர். தேவர் பட்டம் பரதவர்களுக்கும் உண்டு. பாண்டியர்கள் பரதவரை வீழ்த்தியதன்  காரணமாகவே வேள்விக்குடி செப்பேடு, "பரதவரை பாழ்படுத்தும் " என்று சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆனால் கொற்கை நாவல் எழுதிய ஜோடி குரூஸ் தவறான புரிதல் கொண்டு நாவலை எழுதினார். ஆயினும் முற்காலத்தில் பரதவர்கள் உயர் நிலை வகித்தனர் என்பதற்கு செய்திகள் உள்ளன.இதனாலே பரதவர்களை மதுரைக்காஞ்சி தெளிவாகவே குறுநில ஆட்சியர் என்று பாடுகிறது. "தென் பரதவர் போரேறே" என்று அது குறித்து காட்டுகிறது. இன்றைய நிலையில் தென் குமரி பகுதியில் பரதவர்கள் மற்றும் பரதர் என இரு பிரிவுகளாக உள்ளனர் இம் மக்கள் தொகுப்பினர். ஆனால் நச்சினார்க்கினியர் பரதவரும் பரதரும் ஒரே பிரிவினர் என்றே கூறுகிறார். எனினும் பிற்காலத்தில் மீன் பரவன் என்ற நிலை அடைந்தனர். சமண கோட்பாடுகள் இந்து சமயத்தில் புகுந்தபோது பரதவர்கள் இழிநிலை எய்தினர்.கொலைத் தொழில் புரிந்தவராக கருதி மறவர் களுக்கும் இது நேர்ந்தது. "மறவனை எவ்வுயிரும் அஞ்சும்" என்பதன் வழியாகக் கண்டு கொள்ளலாம்.இதில் இந்து சமயங்களின் பங்களிப்பு ஏதுமில்லை.

1 comment:

  1. தென் பரதவர் போரேறே என்றால் பரதவரின் சிங்கம் என்று பொருள்.

    ஆயர் போரேறே கண்ணன்
    குருகுலத்தார் போரேறே சீவகன்.

    மதுரைக் காஞ்சி பரதவரைத்தான் வீரம் மிகுந்த குடிகள் என்று அரசர் உடன் இணைத்து பேசுகிறது.

    ReplyDelete

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.!

திருமுருகன் பூண்டி சான்றோர்குலச் செப்புப் பட்டயங்கள்.! நூல் ஆக்கம்: கொங்கு ஆய்வாளர் புலவர் செ.ராசு கவுண்...