பாண்டியர் -களப்பிரர்-பரதவர்(நன்றி -ராசின் ராசின்)
By
Dr Thavasimuthu maran
ARTICLES
களப்பிரர்களை வென்று மீண்டும் அதிகாரத்தை எய்துகிறார்கள் பாண்டியர். ஆனால் களப்பிரர்களை வீழ்த்தியதோடு சும்மா இருந்து விடவில்லை பாண்டியர்கள். தென் பரதவர்கள் என்று அழைக்கப்பட்ட பரதவர்களையும் சேர்த்தே வீழ்த்துகின்றனர். தேவர் பட்டம் பரதவர்களுக்கும் உண்டு. பாண்டியர்கள் பரதவரை வீழ்த்தியதன் காரணமாகவே வேள்விக்குடி செப்பேடு, "பரதவரை பாழ்படுத்தும் " என்று சுட்டிக்காட்டி நிற்கிறது. ஆனால் கொற்கை நாவல் எழுதிய ஜோடி குரூஸ் தவறான புரிதல் கொண்டு நாவலை எழுதினார். ஆயினும் முற்காலத்தில் பரதவர்கள் உயர் நிலை வகித்தனர் என்பதற்கு செய்திகள் உள்ளன.இதனாலே பரதவர்களை மதுரைக்காஞ்சி தெளிவாகவே குறுநில ஆட்சியர் என்று பாடுகிறது. "தென் பரதவர் போரேறே" என்று அது குறித்து காட்டுகிறது. இன்றைய நிலையில் தென் குமரி பகுதியில் பரதவர்கள் மற்றும் பரதர் என இரு பிரிவுகளாக உள்ளனர் இம் மக்கள் தொகுப்பினர். ஆனால் நச்சினார்க்கினியர் பரதவரும் பரதரும் ஒரே பிரிவினர் என்றே கூறுகிறார். எனினும் பிற்காலத்தில் மீன் பரவன் என்ற நிலை அடைந்தனர். சமண கோட்பாடுகள் இந்து சமயத்தில் புகுந்தபோது பரதவர்கள் இழிநிலை எய்தினர்.கொலைத் தொழில் புரிந்தவராக கருதி மறவர் களுக்கும் இது நேர்ந்தது. "மறவனை எவ்வுயிரும் அஞ்சும்" என்பதன் வழியாகக் கண்டு கொள்ளலாம்.இதில் இந்து சமயங்களின் பங்களிப்பு ஏதுமில்லை.
-
சிவணைந்த பெருமாள் பெரும்பான்மையாக நாடார் சமூகத்திலும் சில மறவர் குடும்பங்...
-
VILLAVAR The Villavar were rulers of the Chera Chola Pandyan kingdoms. Villavar aristocracy was called Nadalvar. Villavar-Bana r...
-
சான்றோர் பாண்டியர் இது ஒரு குலத்தின் அடையாளமா,அல்லது ஒரு பகுதியைச் சேர்ந்தவர்களின் அடையாளமா அல்லது தென் பாண்டி நாட்டை ஆட்சி செய்தவ...
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்:- இவ்வேந்தர் பெருமான் மதுரைமாநகரில் கடைச்சங்க நாளில் வீற்றிருந்து ஆட்சி புரிந்த பாண்டிய...
SEARCH
LATEST
3-latest-65px
Total Pageviews
திருக்குறள்
பதிவுகள் (Updated)
தென் பரதவர் போரேறே என்றால் பரதவரின் சிங்கம் என்று பொருள்.
ReplyDeleteஆயர் போரேறே கண்ணன்
குருகுலத்தார் போரேறே சீவகன்.
மதுரைக் காஞ்சி பரதவரைத்தான் வீரம் மிகுந்த குடிகள் என்று அரசர் உடன் இணைத்து பேசுகிறது.
பரவரை பாழ்படுத்தும் குறு(சிற்றரசர்கள்) நாட்டார் குலத்தை கெடுத்தான் என்று அடுத்த வரியையும் சேர்த்து படித்தால் முழு பொருள் அறிய முடியும்.
ReplyDelete